ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 October 2022

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா!

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சீதன பொருட்கள் வழங்கினார். 


திருச்செந்தூர் வட்டார கர்ப்பிணி பெண்களுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. திருச்செந்தூரில் உள்ள தெய்வா திருமண மகாலில் வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) ரூபி பெர்ணான்டோ வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்டம் குறித்து விளக்கி பேசினார். பின்னர் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை உள்ளிட்ட சீதன பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். 


நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.புகாரி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, துணை தலைவர் சுல்தான் லெப்பை, திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா, வட்டார திட்ட அலுவலர் மரிய ஒளி பாபி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செல்வகுமார், திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad