மணப்பாட்டில் ரூ.48 கோடியில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 13 October 2022

மணப்பாட்டில் ரூ.48 கோடியில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்.

மணப்பாட்டில் ரூ.48 கோடியில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம் - மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினார்!


உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு மீனவ கிராமத்தில் கடலில் ஏற்பட்ட மணல் அரிப்பின் காரணமாக மணல் திட்டுகள் உருவாகி கடலுக்குள் படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.


இதன் காரணமாக படகுகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ஜே.சி.பி. வழங்கி கடலில் ஏற்பட்ட மணல் திட்டை தொடர்ந்து அகற்றி வந்தார். இதனையடுத்து மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ரூ.48கோடி மதிப்பீட்டில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி மணப்பாட்டில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கடலுக்குள் பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.


இதனை தமிழக மீன்வளம், மீனவர்நலத்துறை மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மணப்பாடு ஊராட்சிதலைவர் கிரேன்சிட்டா, மாவட்ட பிரதிநிதி மணப்பாடு ஜெயபிரகாஷ், உடன்குடி யூனியன் கவுன்சிலர் லெபோரின், நாட்டு படகு மீனவ சங்கதலைவர் கயஸ், ஊர்த்தலைவர் பியூஸ், தூயஆவி பங்கு கமிட்டி தலைவர் சந்திரா, வியாகப்பர் ஆலய கமிட்டி தலைவர் சிபூர்சியான், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, முன்னாள் கவுன்சிலர் பிரதீபன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சந்தையடியூர் ரவிராஜா, இளைஞர் அணி பயாஸ், அஜய் மற்றும் ஊர் நல கமிட்டியினர், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இது தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, 30 ஆண்டுகால எங்களது கோரிக்கையை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் நிறைவேற்றியுள்ளார் விரைந்து இப்பணியை முடித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad