தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுக்கா தாப்பாத்தி என்ற கிராமத்தில், இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் இயங்கி வருகிறது. இலங்கையில் இன பிரச்சனை ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட ஏராளமான தமிழர்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த மறுவாழ்வு முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் என்று அதிரடியாக ஆய்வு செய்தார். முகாமில் அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர வெளி நபர்கள் யாராவது இருக்கிறார்களா... முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்த அவர் முகாம் முழுவதையும் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment