குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் தினத்தினை ஆசிரியர் தினமாக ஆசிரியர் கல்வி பேரவை குழு கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர்.கண்ணன் வரவேற்புரை நல்கினார். இயக்குனர் முனைவர் தP. கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் தத்தம் கடமை உணர்ந்து செயலாற்றவும், மாணவர்கள் திறமையைக் கண்டறிந்து செயலாற்றும்படி கூறினார்கள். கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் கெங்குமணி ஆசு+ இரியன்= ஆசிரியன்
மாணவர்கள் குற்றம் நீக்குபவன் என்று கூறி ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஆ.அன்னலெட்சுமி பேசும்போது மாணவர்களிடம் உள்ள குற்றம் நீக்கி அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வருவது ஆசிரியரின் கடமை. அந்த கடமை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றார்.வணிகவியல் துறை பேராசிரியர் இ. ரேவதி நன்றியுரை
வழங்கினார். அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு துறையின் மாணவ மாணவிகளும்தமது துறை பேராசிரியர் பெருமக்களுக்கு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர் .
மொத்த நிகழ்வுகளையும் செல்வி.அற்புதபிருந்தா தொகுத்து வழங்க விழா நாட்டுப் பண்ணோடு
இனிதே நிறைவு பெற்றது. விழா சிறப்புடன் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment