தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பில் முப்பெரும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 September 2022

தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பில் முப்பெரும் விழா



தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் சார்பில் ஆசிரியர் தின விழா, சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிறந்தநாள் விழா மற்றும் திறனாய்வு தேர்வில் அதிக மாணாக்கர்களை தேர்ச்சி பெற வைத்த திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளி  ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா 5.9 2022 அன்று திருச்செந்தூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின்  தாளாளர்  ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள்.R.சுடலை, தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க பொருளாளர் ஜெகநாத பெருமாள் வ.உ.சி. நற்பணி மன்ற  நிறுவனர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்று  வாழ்த்தி பேசினார்.
 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவரும் ஒன்றிய திமுக செயலாளருமான ஏ. பி.ரமேஷ் கலந்துகொண்டு  முப்பெரும் விழா போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி  கௌரவப் படுத்தினார்.
 இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அரசு வழக்கறிஞர் சாத்ராக், நகர்மன்ற உறுப்பினர்கள் சோமசுந்தரி,தீர்த்தாராப்பன், முத்துக்குமார் என்ற கண்ணன்,  நகர துணைச் செயலாளர்  பெரு.மகராஜன், கோமதிநாயகம் சமூக ஆர்வலர் கோடிஸ்வரன் ஜெயக்குமார்,அமலிச்சந்திரன்  மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்
 பள்ளி தலைமையாசிரியை திருமதி உஷா ஆசிரியர்கள் சார்பாக நன்றி உரை கூறினார்.  பின்பு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல்நூலகர் நூலகச்செம்மல் மாதவன் சிறப்பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad