பயிரின் வளர்ச்சிக்கு மிக குறைந்த அளவில் ஆனால் அத்தியாவசியமாக கருதப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்கள் எனப்படுகின்றன. அவைகள் இரும்பு,மாங்கனீசு, துத்தநாகம்,தாமிரம்,போரான் மாலிப்டினம், சோடியம், சிலிகான் அலுமினியம் ஆகியவைகளாகும். நமது அன்றாட உணவில் சோறு,குழம்பு,காய்கறிகள் சிறிது உப்பு என்று சேர்த்து சமைக்கும் பொழுது எப்படி சுவை பெறுகிறதோ அதைப் போலவே இந்த நுண்ணூட்ட உரங்கள் பயிரின் ஒளிச்சேர்க்கை சுழற்சியில் பல்வேறு நிலையில் பச்சையும் உருவாகும் தழைச்சத்தை கிரகித்து அதிலும் பாஸ்பரஸ் சத்து தாவரங்களின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விதைகளின் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கும் வேர் வளர்ச்சி மற்றும் பயிரின் வளர்ச்சி, மகரந்தங்களின் வீரியம் அதிகரிக்கச் செய்தல் இது போன்ற பணிகளை மேற்கொண்டு பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யவும் மகசூலை பெருக்குவதற்கும் வழி செய்கின்றன.எனவே விவசாயிகள் பயிர்களில் விளைச்சல் அதிகமாக பெற பேருட்டங்கள் எனச் சொல்லப்படும் தழை மணி சாம்பல் சத்துக்கள் உடன் நுணுக்கங்களையும் இடுதல் அவசியம் ஆகிறது.நுண்ணூட்ட உரங்கள் அடியுரமாக கடைசி உழவின் போது நிலத்தின் மேலே இட வேண்டும். குறிப்பாக உரங்களை இட்டபின் உழுதல் கூடாது. இலைவழி தெளிப்பு மேற்கொள்ளலாம்.நெல் பயிர் வகைகள் போன்றவற்றிற்கான நுண்ணூட்ட உரங்கள் தூத்துக்குடி புதுக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது இது தவிர நெல் ஏ. எஸ். டி 16,சி. ஓ.51,மற்றும் உளுந்து விபிஎன் 8,எம் டி. யூ.1,பாசி சி.இ.ஓ. 8,வி. பி. என்.4 போன்றவைகளும் இருப்பில் உள்ளன.இந்த நல்ல வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா கேட்டுக் கொள்கிறார்.
Post Top Ad
Thursday, 8 September 2022
Home
தூத்துக்குடி
விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் நெல், உளுந்துகிட்டு பயனடைய வேளாண்மை உதவி இயக்குனர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் நெல், உளுந்துகிட்டு பயனடைய வேளாண்மை உதவி இயக்குனர் அறிவிப்பு
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment