தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் நடத்திய இளைஞர் திறன் காண் திருவிழா நடைபெற்றது.
இதில் 18 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பிற்கான நேரடி தேர்வு முகாமினை 18 வயது முதல் 45 வயது வரை உடைய ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் நடத்தியது இதில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஜனகர் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவில் முன்னிலை வகித்தார்.
திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மற்றும் இணை இயக்குனர் உயிரை வீரபத்திரன் தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.குளோரியம் அருள்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
No comments:
Post a Comment