பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டுநலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தப்பட்ட மஞ்சள் பை திட்டத்தை திட்டமான மிக சீரிய முறையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தூத்துக்குடி மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி வாழ்வதற்கும், தூய்மையான தூத்துக்குடி அமையும் வகையிலும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தூய்மையின் அவசியம் குறித்து மாநகராட்சி பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசு மற்றும் இயற்கைக்கு முரணான செயல்பாடுகளை தவிர்க்கும் வகையில் மாநகர பகுதிகளில் அமைந்து உள்ள தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுதோறும் மொத்தம் 5 லட்சம் துணிப்பை மாநகராட்சி முழுவதும் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக கடலோர பகுதிகளில் அமைந்து உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா 3 பைகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் அபராதம் விதிக்கவும், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் மரு. அருண்குமார், திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், பட்சிராஜ், வடக்கு மண்டல சுகாதார அலுவலர் அரிகணேஷ், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment