தூத்துக்குடி ஜெயின்ட்ஸ் குழுமம் மற்றும் தூத்துக்குடி ஜெயின்ட்ஸ் சஹெலி,வாசன் கண் மருத்துவமனை இணைந்து புதுக்கோட்டை குமாரகிரி பகுதியில் உள்ள பெரியநாயகம் பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்து இருந்தது.இந்த கண் சிகிச்சை முகாமில் கிட்டப்பார்வை தூரப்பார்வை கண் நீர் அழுத்தம் கண்ணில் நீர் வடிதல் ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் இலவசமாக ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலருக்கும் நடைபெற்றது இந்த இலவச சிகிச்சை முகாமை குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரை மணி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் ஜெயின்ட்ஸ் தலைவர் இராஜதுரை,திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ராம்குமார், முன்னாள் தலைவர் ஜெயலால், அழகு ராம் லேண்ட் புரமோட்டர்ஸ் உரிமையாளர் வெங்கடாசலம் மற்றும் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முகாமில் புதுக்கோட்டை கூட்டுடன் காடு, கூட்டாம்புளி, செக்காரகுடி,பேரூரணி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் மொத்தம் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பரிசோதனைகளை செய்து அதற்கான சீட்டுகள், கண் கண்ணாடிகளுக்கான பரிந்துரைகள், ஆகியவைகள் வழங்கப்பட்டன. முகாமினை வாசன் கண் மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறந்த முறையில் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment