ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 September 2022

ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் விழா

தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டப்பிடாரம் தாலுகா வாகைகுளம் ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து நடத்திய ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் விழா
 வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 120 மகளிர் குழு பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல் நிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் மாசான செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, முடிவைத்தானேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா,இளம் விஞ்ஞானி நிவேதிதா, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் ஐஎப்எஸ்சி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் காய்கறி தோட்டம் மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்து கருத்துரையாற்றினார். நிகழ்வில் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் வேல் முருகன், முருகன், முத்துக்குமார்,சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.தொழில்நுட்ப முறையில் மற்றும் நிலைய பண்ணை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களுக்கு பழ மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வீட்டு காய்கறி விதைகள் மற்றும் பழ மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.மகளிர் குழு பெண்கள் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு தேவைப்படும் உயிரினங்கள் இக்கருத்தரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.நிலையத்தின் பண்ணை மேலாளர் தாமோதரன் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment

Post Top Ad