மாவட்ட குறு வட்ட அளவு விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 22 September 2022

மாவட்ட குறு வட்ட அளவு விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா

தூத்துக்குடி குறு வட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் துறைமுகம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இதில் 52 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.தடகளப் போட்டிகள் தூத்துக்குடியில் தருவை மைதானத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி ஒலிம்பிக் தீபம் ஏற்றி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு  போட்டிகளை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) டி.தமிழ்ச்செல்வி வாழ்த்துக்களுடன் பரிசுகள் வழங்கினார். மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெய ரத்ன ராஜன்  ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாலையிலேயே தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் டி. கே. ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பரிசுகள் வழங்கினார்.துறைமுக ஆணைய துணைத் தலைவர் பிமல் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பாலதண்டாயுதபாணி வாழ்த்துக்களை சொன்னதுடன் துறைமுக கல்விக் கழக தலைவர் மல்லா ஸ்ரீனிவாச ராவ்,துணைத் தலைவர் ஏ. வித்யா, செயலாளர் செந்தில் கணேஷ் ஆகியோர்களும் பரிசுகளை வழங்கினார். மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி புனித தொமயர் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி திரு சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் திருசிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது விழாவிற்கான ஏற்பாடுகளை துறைமுகம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் குறு வட்டார விளையாட்டு போட்டிகளில் செயலாளர் பி.கே.ஷர்மிளா ஜெனிதா உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இணைச்செயலாளர் திருமலைக்குமார், ஏனைய ஆசிரிய ஆசிரியைகள்,அலுவலர்கள் பலரும் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad