எனது படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இருக்கும் : நடிகர் வடிவேலு பேட்டி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 September 2022

எனது படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இருக்கும் : நடிகர் வடிவேலு பேட்டி!

"தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்" என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்வதற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அவர் கோயிலுக்கு சென்று மூலவர், சண்முகர்,  சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதி மற்றும் பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் தற்போது நாய் சேகர், ரிட்டன், மாமன்னன். சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.  இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். 


உடல்நலம் குறைவால் இருக்கும் நடிகர் போண்டாமணிக்கு இயன்ற உதவியை செய்வேன். என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். நாய் சேகர், ரிட்டன் படத்தில் பாடல்கள் பாடி உள்ளேன். அப்பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்" இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad