போதைப் பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை ஆலோசனைக் கூட்டம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 September 2022

போதைப் பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை ஆலோசனைக் கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.


ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, கூடுதல் அமர்வு நீதிமன்றம் Iன் அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேபிரியல்ராஜ், மகிளா நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் எல்லம்மாள், சார்பு நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் மாலா தேவி, கூடுதல் அமர்வு நீதிமன்றம் IIன் உதவி வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாஷம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் III நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் கண்ணன், 


திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகேசன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் அசோக், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன்ராயன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞர் வசந்த், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் ராஜாமோகன், கோவில்பட்டி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் கமலவாசன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,


தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் சத்தியராஜ், திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மணியாச்சி லோகேஸ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், சாத்தான்குளம் அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பிரேமானந்தன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad