பேர்களும் பொறுப்பாசிரியர்கள் 40 பேரும் ஆக கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்த மூன்று நாள் முகாமில் வந்திருந்தவர்களை மாவட்ட செயலாளர் எட்வட் ஜான்சன் pre Alt(s) வரவேற்றார்.முகாமின் நடைமுறை விதிகள் பற்றியும் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் தேசிய பயிற்சியாளர் கே. நாராயணன்Alt கூறினார்.முகாமில் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற இறை நினைப்பை கொண்டு செயல்பட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார்.முகாமின் இரண்டாம் நாளில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை ஏற்று பேசும்பொழுது "ஒவ்வொரு பள்ளியிலும் சாரண சாரணிய இயக்கம் தொடங்கி மாணவ மாணவியர்களை நல்வழிப்படுத்தவும் சமுதாயத்தில் ஒழுக்கம் உள்ளவர்களாகவும் மாற்றுவதற்கு இவ்இயக்கம் அவசியம் "என்று கூறினார்.
இந்த இரண்டாம் நாள் முகாமில் பள்ளிதலைமைஆசிரியர்கள்,பொறுப்பாசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி நடைபெற்றது.முகாமின் இறுதி நாளான மூன்றாம் நாளில் சாரண சாரணியர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது.குறிப்பாக இந்த மூன்று நாட்களிலும் சாரண சாரணிய, மாணவ,மாணவிகளுக்கு இயக்க வரலாறு பற்றியும், சட்டவிதிகள், சீருடை, இறைவணக்கப் பாடல், கொடி பாடல், கொடிகள் பற்றிய விளக்கம், கொடியேற்றும் முறை,நில வரைபடம், மதிப்பிடுதல், மரபுக் குறியீடுகள்,கயிறுகள், முதலுதவி,அணி கூட்டம், அணி விளையாட்டு,திறமைக்கான சின்னங்கள் என பல வழிகளும் கற்பிக்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் குருப் ஆசிரியர்களுக்கும் சாரண சாரணியர்களுக்கும் மாவட்ட பயிற்சி ஆணையர் சாரணியர் பிரிவு ஜெயா சண்முகம் Alt(G)நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எட்வேர்ட் ஜான்சன் பால்PreAlt(S),மாவட்ட ஆணையர் சரவணன்HWB(S),அமைப்பு ஆணையர்கள் வள்ளியம்மாள், ஆல்பர்ட் தினேஷ் சாமுவேல், பயிற்சி ஆணையர்கள் ஜெயா சண்முகம்Alt(G), சிவகுமார்HWB(S) ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment