தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.நிறுவன தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான கோரிக்கைகளை உருவாக்கியும்,தமிழக அரசின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரியும்,சொத்துவரி வீட்டுவரி உயர்வையும் இன்னும் ஓராண்டு கழித்து விதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும்,அண்மை நாடான இலங்கையில் நடைபெற்ற பொருளாதார வீழ்ச்சியில் ஏற்பட்ட இன்னல்களுக்கு நம் மத்திய அரசும் மாநில அரசும் ஆற்றிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தும், தமிழக அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் ஒழுக்கத்தை பேணும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சிற்பி திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் போதை பொருட்களை நடமாடுவதால் ஏற்படும் இன்னல்களும் அதனால் இளைஞர்களின் வாழ்வு சீரழிவது குறித்தும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் இவைகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு இந்த அமைப்பின் பெண்கள் வழக்கறிஞர்கள் குழு செயல்படும் என்றும் அவர் சுரேஷ் கண்ணன் கூறினார்.கூட்டத்திற்கு பல்வேறு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Sunday, 25 September 2022
"சிற்பி "திட்டம் வரவேற்போம் சர்வதேச உரிமைகள் கழக நிறுவனர் வாழ்த்து
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment