"உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்போம்" ஐசிசியின் இணைச் செயலர் பேச்சு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 September 2022

"உள்ளூர் திறமைகளை ஊக்குவிப்போம்" ஐசிசியின் இணைச் செயலர் பேச்சு

தூத்துக்குடி ஜெயின்ஸ் குழுமம் மற்றும் ஜெயின் ஹகெலி பெண்கள் அமைப்பு இணைந்து தூத்துக்குடியில் பல்வேறு நலத் திட்ட செயல்பாடுகளை கடந்த ஒரு வார காலம் செய்துவந்தது. இதில் கண் பரிசோதனை முகாம், மரம் நடுதல் என பல வகைகளிலும் மக்கள் பயன்படும் வகையில் ஒரு வார காலம் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் நிறைவு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில் வர்த்தக அமைப்பின் இணை செயலாளர் கே பொன் வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசுகையில் ஜெண்ட்ஸ் என்பது ஊக்குவித்தல் முன்னிறுத்தும் அமைப்பாகும் ஊக்குவித்தல் என்பது ஏற்கனவே பணிகளைச் செய்துவரும் உங்களை உற்சாக மட்டும் குறிப்பாக உள்ளூர் திறமையாளர்களை கண்டு அவர்களை ஊக்குவிப்பதும் உற்சாகப்படுத்தும் முக்கியமாக தேவை ஒன்று என்று கூறினார்.
 இந்த நிறைவு விழாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவந்தாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை எனில்லடா வெலின்சியா, தூத்துக்குடி மேலூர் தபால் நிலையத்தின் உதவி தலைமை அதிகாரி செல்வி,தூத்துக்குடி மாநகராட்சி மேற்பார்வையாளர் அந்தோணி அகஸ்டின்,வீ கேன் டிர ஸ்ட் மரம் நடு குழுமத்தின் முத்துசாமி ஆகியோரின் சிறப்பு பணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக கௌரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஜெயின்ஸ் குடும்பத்தின் சிறப்புக் குழு உறுப்பினர் விஜய கிருஷ்ணன், சிறப்பு அலுவலர் டீ. செந்தில் கண்ணன் ,தொகுப்பு இயக்குனர் சுந்தரம், நிர்வாகத் தலைவர் இராஜதுரை, பொருளாளர் தனசேகர், நிர்வாகபொறுப்பாளர் கணேசன்,சஹாலி நிர்வாக தலைவர் கிருஷ்ணவேணி, இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெயபால் ஆலிவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad