தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாள் விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் நாள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக முதியவர்கள் அனைவருக்கும் உணவு,இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் பனை வாரிய உறுப்பினர் எடிசன் தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் உணவு வழங்கினார்.இதில் மண்டல தலைவர் ராஜன் மாநகர் மாவட்ட துணை தலைவர் பிரபாகரன், பஞ்சாயத்துராஜ்
சங்க்தன் மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ்,மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர்கள், துணைத் தலைவர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment