மாவட்ட தொழில் மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா.பொது மேலாளர் துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 August 2022

மாவட்ட தொழில் மையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா.பொது மேலாளர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தெற்கு மண்டல குழாய் பாதை திட்டம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்று நடும் பணியை மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர் கடந்த மாதம் துவக்கியதை தொடர்ந்து மரக்கன்று நடும் பணி  மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக  கோரம்பள்ளதிலுள்ள தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மூத்த மேலாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி மேலாளர் சிவக்குமார் முன்னிலை வைத்தார். முன்னதாக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ..சொர்ணலதா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடும்  பணியை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய  தணிக்கையாளர்கள் நெடுமாறன், முருகேசன்,  திட்ட மேலாளர் அகிலா, உதவி இயக்குனர் சார்லஸ், கெல்வின், ஆ,சொசைட்டி இயக்குனர் சங்கர் கணேஷ் மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் எஸ். பானுமதி நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad