தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருப்பு முனை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும்
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில்
நடைபெற்றது.பள்ளி தலைமையாசிரியர் சாந்தினி கௌசல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் ரூபாய் 19.20 லட்சம் மதிப்பிலான 385 மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் கலை அரங்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருப்பு முனை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுத பாணி, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆனந்த சேகரன், அருன்குமார், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி கல்வி அலுவலர் சின்னராசு நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment