"வருகின்ற செப்டம்பர் 7 கன்னியாகுமரியில் கைகளால் இணைவோம் தேசத்தை வலுப்படுத்துவோம் ஏரல் முப்பெரும் விழாவில் மாணிக்கம் தாகூர் எம்பி எழுச்சி உரை "ஏரல் தாலுகா வில் காமராசரின் 120வது பிறந்த நாள் விழா, 75வது சுதந்திர தின பவள விழா,மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவானது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸின் தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் தலைமையேற்று நடத்திய விழாவில் தமிழக காங்கிரஸின் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கொராடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களைக் கொண்ட பெரும் தேசிய பாரம்பரியத்தைக் கொண்ட காங்கிரசும் அதன் தலைவர்களும் என்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் அவற்றையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்தும் நிலைபெறச் செய்யவும் வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பேரன் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல்காந்தி மிகப்பெரிய பாத யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார்.கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீரில் முடிகின்ற இந்த பாதயாத்திரையினை தமிழகத்தில் தொடங்க இருக்கிறார்.எனவே நமது கைகளால் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து தேசத்தின் நலனை வலுப்படுத்த அனைவரும் வாரீர் என முழங்கினார்.தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், பெண்களுக்கு இலவச தையல் மிஷின், இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வண்டிகள்,முதியவர்களுக்கு பென்ஷன் என பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் இந்திய சுதந்திரம் பற்றியும், காமராசர் வரலாறு , ராஜீவ் காந்தி வரலாறு மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் என் பணிகள் என அனைத்தும் காணொளிக்காட்சி வழியில் அனைவரும் கண்டு களித்தனர்.விழாவில் தூத்துக்குடி, ஏரல், ஸ்ரீ வைகுண்டம் என அனைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment