முடிவைத்தானேந்தல் சேவை மைய கட்டிடத்தில் புதிய ஆதாருக்கும் மற்றும் பழைய ஆதாரில் திருத்தம் செய்யவும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாளையும் நடைபெறும். திம்மராஜபுரம் ,வர்த்தக ரெட்டி பட்டி ,புதூர் மக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துப் பயன் பெறலாம். இணைப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம், பான் கார்டு ,பேங்க் பாஸ்புக், ஓட்டர் ஐடி இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். பிறந்த தேதி மாற்றுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களுடைய கல்வி சான்றிதழில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். புதிதாக குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் எடுக்க அம்மா, அப்பா இருவரின் ஆதார் அட்டையில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
புதிய ஆதார் எடுப்பவர்கள்,ஐந்து வயதுக்கு மேற்பட்ட வர்கள் மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு அனைத்து சேவைகளுக்கும் ரூ.50,100 கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment