விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கிராமங்களில் 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதல் கட்ட பணியாக 29-கிராம ஊராட்சிகளிலும் 3- பேரூராட்சிகளிலும் பணிகள் துவங்குவதற்கான ஆய்வுக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G. V.மார்கண்டேயன் கலந்து கொண்டு மரங்கள் நடுவது குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் சரவணன் அவர்கள் தலைமையிலும், தூத்துக்குடி வனக்கோட்டம் உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்
ஒன்றிய பெருந்தலைவர்,பேரூராட்சி மன்ற தலைவர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment