ஏ. ஐ. டி. யூ. சியின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 September 2022

ஏ. ஐ. டி. யூ. சியின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்மாநில ஏஐடியூசி முடிவின்படி தூத்துக்குடிமாவட்ட ஏஐடியூசி சார்பாக பீச்ரோட்டிலுள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக இன்று காலை கீழ்கண்ட கோரிக்கைகைள வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை,A.பாலசிங்கம்,மாவட்ட தலைவர் (பொ ),கோரிக்கைகைள விளக்கி  தோழர்,E.கிருஷ்ணராஜ்,பொதுச்செயலானர், A.முத்துகுமார், தமிழ்நாடுமின்சாரத் தொழிலாளர்சம்மேளம்மாநில இணைச்செயலார், தோழர்,நெப்போலியன், டாஸ்மாக் மாநில உதவித்தலைவர் , S.சேது,கட்டுமான மாநில செயலாளர், சுப்பையா,மாவட்ட பொருளாளர்,    கோட்டை நடராஜன், சங்கரவேல்,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட குழு தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதில் மத்திய அரசின் திருத்திய தொழிலாளர்நலச்சட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது. என்றும் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ரூபாய் 21000/=வழங்க வேண்டும்,ஒராண்டுக்குள் 240நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.EPF திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ 6000/=வழங்க வேண்டும்.மின்சார கட்டணம்,வீட்டுவரி,சொத்துவரி மற்றும் தண்ணீருக்கும் உயர்த்தியதை உடனடியாக கைவிட வேண்டும்.மின்துறையை தனியார் மயமாக்கப்படும் சட்ட திருத்தத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad