பி.எம்.கிசான் விகாஸ் திட்டம் மூலம் பயன் பெறும் பயனாளிகள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 6000 ஊக்கத் தொகை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் பயன் பெற்று வரும் விவசாயிகள் தொடர்ந்து ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கொண்டு இணையதளத்தில் விவரங்களை மேம்படுத்துதல் வேண்டும். இவ்வாறு e-kyc செய்தால் மட்டுமே பயனாளிகள் தொடர்ந்து பணப்பலன் பெற முடியும். தூத்துக்குடி வட்டாரத்தில் இன்னும் நிறைய பயனாளிகள் இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது.எனவே பதிவு செய்ய வேண்டிய அவர்கள் அனைவரும் தங்களின் நில ஆவணங்கள் ஆதார் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண் கொண்ட செல்லிடப்பேசியுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகலாம் மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Post Top Ad
Saturday, 20 August 2022
பி.எம்.கிசான் திட்ட பயனாளி விவசாயிகள் e-kyc செய்தல் கட்டாயம்
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment