தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுத்தமான சுற்றுசூழலைaயை ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து ஊரக பகுதிகளிலும் ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு முகாமினை நடத்திடும் பொருட்டு வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தொகுதி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்,ஊராட்சி தலைவர்கள், துணை ஊராட்சி தலைவர்கள்,உதவி பொறியாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார சுகாதார ஆய்வாளர்,வட்டார வள மைய அலுவலர்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணி மேற்பார்வையாளர்கள்,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார வட்டார இயக்க மேலாளர்,ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் திட்ட குழு உறுப்பினர் உறுப்பினர்கள்,தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நம்ம ஊரு சூப்பர் என்ற சிறப்பு முகாமினை ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடத்துவது குறித்த கிராம ஊராட்சி அளவில் கூட்டம் நடத்திட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment