பேய்க்குளம் விவசாயிகள் சங்க 150வது ஆண்டு விழா தூத்துக்குடி எம். பி, அமைச்சர்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 21 August 2022

பேய்க்குளம் விவசாயிகள் சங்க 150வது ஆண்டு விழா தூத்துக்குடி எம். பி, அமைச்சர்கள் பங்கேற்பு.

தூத்துக்குடி மாவட்டம், இருவப்பபுரம் - ஏரல் வட்டத்தில் நடைபெற்ற பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150வது ஆண்டு விழாவும்,நினைவு தூண் திறப்பு விழாவும், திறப்பு விழா மலர் வெளியீட்டு விழாவும் கடந்த 
ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் குணசேகரன், உப தலைவர்கள் சுயம்பு ராஜ், தாமஸ், செயலாளர் ஜெய பொன்ராஜ், துணை செயலாளர் ஞானராஜ், பொருளாளர் கார்த்திகேயன், மாணவரணி திமுக மாநில துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக பிரமுகர்கள், வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad