ஐ. டி. எப். மற்றும் ஹெச். எம். எஸ்ன் இரண்டு நாள் பயிற்சி பயிலரங்கு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 August 2022

ஐ. டி. எப். மற்றும் ஹெச். எம். எஸ்ன் இரண்டு நாள் பயிற்சி பயிலரங்கு

 இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கேர்ஸ் பெடரேஷன், தூத்துக்குடி ஹெச்.எம்.எஸ் சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கன்டென்னெர் குழும பொது ஊழியர் களுக்கான 2 நாள்  பயிற்சி பயிலரங்கு தூத்துக்குடியில் நடைபெற்றது.இதில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வேலை தன்மை பற்றியும் அவர்களுடைய வேலையிலிருந்து கூடிய இடர்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினர்.குறிப்பாக கப்பல் போக்குவரத்து வழி சரக்கு கையாளுதால்,ஆகாய போக்குவரத்து வழி சரக்கு கையாளு தல் பணிகளில் உள்ள ஊழியர்களின் பணிச் சுமைகள் பற்றியும் அவருடைய பணி நியமனம் பற்றியும் அவர்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு மற்றும் அடிப்படை காப்பீடு இவர்களைப் பற்றியும் அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர். இந்த பயிலரங்கில் இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கேர்ஸ் பெடரேஷனின் ஆசியா கண்டத்தின் பெண்கள் மற்றும் நிதி மேலாண்மை பொறுப்பாளராக இருக்கக்கூடிய கீதா, ஹெச்.எம்.எஸ் மாநிலச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ராஜ்குமார், முனைவர். ராஜலக்ஷ்மி மற்றும் இதன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad