விழாவில் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத் தலைவருமான வீரமாகாளி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயலட்சுமி,துணைத் தலைவர் அந்தோணி பிரிட்டன்,தலைமை ஆசிரியை கிறிஸ்டி எக்ஸிபா ,உதவி தலைமை ஆசிரியை,ஆசிரி ஆசிரியைகள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.விழாவின் சிகரமாக பள்ளியில் மாணவ மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டு அதிகரிக்கும் வகையில் அதிநவீன காட்சி வழி கற்றல் திரையுடன் கூடிய வகுப்பறையை(Atal tinkering lab)ஊராட்சி மன்ற தலைவி ரம்யா திறந்துவைத்தார். நிகழ்வில் பேசிய தலைமையாசிரியை வகுப்பறையில் மாணவ மாணவியர் இருக்கையில் அமர்ந்து தங்களின் கற்றல் வழி முறையில் காட்சி வழி செயல்விளக்க பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அதற்கான அமைப்பையும் ஒளிப்படக் கருவியும் அதிநவீன முறையில் மத்திய அரசின் திட்ட வரைவின் அடிப்படையில் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி எதிர்காலம் மேம்பாட்டிற்கு உதவும் என்பது முக்கியமான ஒன்று. இதுபோன்ற ஒரு வகுப்பறையில் மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் அரசு தேர்வுகளையும் எளிதில் வெற்றி பெற முடியும் அதற்கு இந்த வகுப்பறை நிச்சயமாக அவர்களுக்கு உதவும்.அத்துடன் மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் இந்த வகுப்பறையை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது நடந்து முடிந்திருந்த பள்ளியின் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தலைமையாசிரியை என பலரும் வழங்கினர்.விழாவின் நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்ட முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார்.
No comments:
Post a Comment