நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் வசுமதி தலைமையில் சுதந்திர தின கொடியேற்ற விழா இனிப்புகள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆஸ்கர், கவுன்சிலர்கள் முத்துக்குமார், ஆனந்தி, முத்துமாலை,நர்மதா, சேவியர்,ஜெய கணபதி,செல்வபாரதி, சுதர்சன், முத்துலட்சுமி,அந்தோணி தனுஷ் பாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், அதிகாரி மாசாணம்,அலுவலர்கள்,பாரதி சிலம்பாட்ட மாணவ மாணவியர், அரசு பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.விழாவில் தலைவர் வசுமதி தேசியக் கொடியை ஏற்றினார்.அதனைத் தொடர்ந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.விழாவில் பாரதி சிலம்பாட்ட குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். குறிப்பாக வாள்வீச்சு, சிலம்ப பயிற்சி, ஒயில் கும்மி என வந்திருந்த அனைவரையும் கலை திறமையால் மகிழ்வித்தனர்.நிகழ்வில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடியதுடன் நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
Post Top Ad
Wednesday, 17 August 2022
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment