தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட,கீழஈரால் கிராமத்திலுள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம்* இணைந்து நடத்திய மரம் வளர்ப்போம் வாரீர் ஓர் நாள் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவ- மாணவியருடன் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார்.மேலும் கல்லூரி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகை ஆகிய வற்றை வழங்கினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் விக்டர் அந்தோணிராஜ்,கல்லூரியின் முதல்வர்
ஜோசப்சார்லஸ், ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகள்,மரங்கள் மக்கள் இயக்கத்தினர்,கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வின் இறுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
No comments:
Post a Comment