இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 August 2022

இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம்

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி கிளையும்
முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் பொதுமக்களுக்கான மாபெரும் இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் பல் பராமரிப்பு பற்றியும் பற்கள் சீரமைப்பதில் பின்பற்ற வேண்டிய முறைகள் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன் பல் சொத்தை, ஈறு பிரச்சனைகள்,பல் அடைத்தல், வேர்சிகிச்சை இவைகள் பற்றிய பரிசோதனைகளையும் அதற்கான விளக்கங்களையும் அளித்தனர்.மேலும் முகாமில் ப்ரஸ் பேஸ்ட் அடங்கிய இலவச கிட் வழங்கப்பட்டது. நிகழ்வில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி கிளை தலைவர் பிரின்ஸ் சோ எஸ்,செயலாளர்  கமலா சங்கர்,பொருளாளர் பிருத்திவிஷங்கர்,கன்வெனியர் ஸ்ரிதேவி ஜோயல்,உறுப்பினர்கள் ஐஸ்வர்யா,விஜயபாரதி, ராதாகிருஷ்ணன், வெங்கடகிருஷ்ணன், வினிதா,ஜான் வெஸ்லி, சுஜிதா பாண்டிராஜ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

Post Top Ad