இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் வீ. ரெ. வீரபத்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் டி. எபனே சர் மங்களராஜ் முன்னிலை வகித்தார்.விழாவில் மகளிர் திட்ட இயக்குனர் வீ. ரெ. வீரபத்திரன் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கருக்கு பொன்னாடை கொடுத்து வரவேற்றார். விழாவில் 353இளைஞர் கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தீன தயாள் உபத்தியாய கிராமின் கவுசல் யோஜன திட்டம் (DDUGKY )பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜன(PMKVY )ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI ) என அரசின் திறன் வளர்ப்பு பயன்பாட்டு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு எடுத்து சொல்ல பட்டதுடன்,விழா வில் பங்கு பெற்ற 10க்கு ம் மேற்பட்ட தனியார் பயிற்சி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு பற்றியும் அதற்கான நேர்காணலும் நடத்தின.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,நாகராஜன், உதவி திட்ட அலுவலர்கள் பிரேமா, பாலசுந்தரம், அருண்பிரசாத், பிரபாகரன், கல்லூரி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.உதவி திட்ட அலுவலர் பிரியங்கா நன்றி உரை வழங்க இனிதே நிறைவுற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் திருவிழா தூத்துக்குடி மறவன் மடத்திலுள்ள பிஷப். கால்டுவேல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment