தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகராட்சியில் சுகாதாரப் பணிகள் செய்கின்றோம் என்று திட்டங்கள் வகுக்கப்பட்டு அப்பணிகளை செய்யாமல் அதற்குரிய பில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்துவதால் காயல்பட்டிணம் நகராட்சியில் மக்கள் பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும் மேற்படி நடக்கும் முறைகேடுகளை கண்டறிய
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். கி.செந்தில்ராஜ் நேரடியாக காயல்பட்டணம் நகராட்சி பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் காயல் சமூக நீதிப் பேரவை சார்பில் துணைத்தலைவர் கபீர், அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் அகமதுசாஹீப், இம்தியாஸ் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பாஸ்,ரபிக்,அப்துல்லா,அப்துல் மஜீத்,செய்யத் முசா,பஷீர் அகமது, சாமு சகாபுதீன்,ஆம்பிரியாஸ்,உட்பட ஏராளமான ராயல் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment