மாற்றுத்திறனாளிகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் - வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 August 2022

மாற்றுத்திறனாளிகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் - வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள திம்மராஜபுரம் பஞ்சாயத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஏற்ற சமுதாயத்தின் பள்ளியும் அதிலேயே சுகாதார பொருட்கள் தயாரிக்கும் தயாரிப்பு பயிர்சிக்குமான துவக்க விழாவும் நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.கி. செந்தில்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் இயக்குனர் வீரபத்திரன் மாவட்ட ஆட்சியரை வரவேற்றார்.திம்மராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் சித்திரைச் செல்வன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி பேசிய மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் சானிட்டரி சுகாதார பொருட்களை நேரடியாக தூத்துக்குடி அரசு நிர்வாகமே கொள்முதல் செய்து விற்பனை செய்யும் என்பதனையும் இந்த பொருட்களை தயாரிக்கும் கூடத்தை இங்கேயே நாம்  நிர்மாணிக்க போகிறோம் என்றும் குறிப்பாக திமராஜபுரத்தில் தயாரிக்கப்படும் வாழைநார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகள்  உங்களால் உருவாக்கப்படும் இந்த பொருட்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இவை சென்றடையும் பொழுது திம்மராஜபுரம் பஞ்சாயத்து தூத்துக்குடி மாவட்டம் அனைத்திற்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  ராமராஜ்,நாகராஜ்,செயல் அலுவலர்கள் ராதா, திலகமணி, செல்வகுமார், வட்டார அணித்தலைவர் கார்த்திகா,தொழில் மேம்பாட்டு அலுவலர் நிவேதா, திட்ட செயலாளர்கள் சேவியர் மணிராஜ், பொன் ராஜேஷ்,வட்டார இயக்க மேலாளர் முத்துமாரி, பயிற்சியாளர் ஜோதி,ஊர் பொதுமக்கள்,மாற்றுத் திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad