காங்கிரஸ் சார்பில் பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 August 2022

காங்கிரஸ் சார்பில் பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டம்

 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடி  மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தவறான பொருளாதார கொள்கை, தவறான பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு வரலாறு காணா விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி அமலாக்கம்,  45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம், கருத்து சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து,   தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு, மத்திய பாஜக அரசிற்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம்,  மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், மார்க்கஸ், முத்துராஜ், எஸ்.பி. ராஜன், நிர்மல் கிறிடோபர், கோபால், செந்தூர் பாண்டி, தனுஷ், கிருஷ்ணன், கேடிஎம் ராஜா, சின்ன காளை, மைக்கில் பிரபாகர், ராகுல், ராஜ், சுடலை, ராஜ ரத்தினம், தனலெட்சுமி, சாந்தி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், கந்தசாமி, 
முன்னாள் மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad