தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி. மு. கவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4வது நினைவு தினம் தூத்துக்குடி ஸ்ரீவை. கிழக்கு ஒன்றிய தி. மு. க சார்பில் முக்காணியில் கட்சி அலுவலகத்தின் முன்பு மலர் மாலைகளால் அலங்கரி க்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு கட்சி பிரமுகர்களும் தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர். கூட்டத்திற்கு ஸ்ரீவை. கிழக்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் எஸ். ஆர். கோட்டாளம் தலைமை தாங்கினார். நிகழ்வில் ஏரல் நகர செயலாளர் எம். எம். டி. ராயப்பன், மணிவண்ணன்,ஏரல் துணை சேர்மன் ஜான் ரத்தின பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நினைவஞ்சலியில் தெற்கு மாவட்ட பொறியாளார் அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், மாரியப்பன், காட்வின் ராஜா, காயல் முகமது, ஜான்சன், சங்கர், ராமசுப்ரமணியன்,ஒன்றிய துணை செயலாளர் அருணா,ஒன்றிய நிர்வாகிகள் ஜான் பாண்டியன், மாரியப்பன், மஹாலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment