அரசு பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம். எம்.எல்.ஏ.சிறப்புரை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 August 2022

அரசு பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம். எம்.எல்.ஏ.சிறப்புரை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாநில மக்களுக்கு விடுத்த போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு அறிவுறுத்தலின் பேரில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
போதைப் பொருள்களுக்கு எதிரான  விழிப்புணர்வு  கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V மார்கண்டேயன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் போதைப் பொருட்களால் விளையும் தீமைகள் குறித்தும் அதனை முற்றிலும் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விழிப்புணர்வு தரும் வகையில் மாணவ,
மாணவிகளிடையே  சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர்ரோஸ்லின்சாந்தி,விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், வட்டாட்சியர்
சசிக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர்
சுந்தரவேல்,பேரூர் கழகச் செயலாளர்
வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர்
அய்யன்ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் 
சின்ன மாரிமுத்து,
அன்புராஜன், ராமசுப்பு,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்,மாவட்ட பிரதிநிதிகள், செயலாளர்கள்,
கவுன்சிலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்,ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டு போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad