குலசேகரப்பட்டின கிளை நூலகத்தில் நூலக தின விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 12 August 2022

குலசேகரப்பட்டின கிளை நூலகத்தில் நூலக தின விழா


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலுள்ள கிளை நூலகத்தில் 
நூலக அறிவியல் துறையின் தந்தை சீ.ஆர். அரங்கநாதனின் 130வது பிறந்தநாள் விழா 12 ஆகஸ்ட் 2022 
நூலக தினமாக கொண்டாடப்பட்டது. வாசகர் வட்ட தலைவர்  சுடலைமணி  சீ.ஆர்.அரங்கநாதனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விழாவில் தலைமை தாங்கினார்.
நூலக தின சிறப்பு நிகழ்ச்சியாக குலசேகரப்பட்டினம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு ,அவற்றுக்கான பரிசுகளை தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க பொருளாளர். ஜெகநாத பெருமாள் ,ஆசிரியர் பார்வதி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல் நூலகர் நூலக செம்மல் த மாதவன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad