காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 July 2022

காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

தூத்துக்குடியில் சி. ஜி. இ.காலனியில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினார். இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளியின் துணை முதல்வர் சுப்புலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி செயலாளர் அருணாச்சலம் விழாவிற்கு தலைமை தாங்கினார்.பள்ளியின் முதல்வர் மீனாகுமாரி வாழ்த்துரை வழங்கினார்.பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளின் பரதநாட்டிய விழாவுடன் இனிதே தொடங்கியது. காமராஜர் பற்றிய குழுப்பாடல் மழலையரின் மாறுவேடம், கதை சொல்லுதல் என ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.பத்தாம் வகுப்பு மாணவி காமராசரின் வாழ்க்கை வரலாறு பற்றி உரையாற்றினார். பதினொன்றாம் வகுப்பு மாணவர் காமராசர் பாடலை பாடினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி கவிதையும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் நாட்டுப்புற நடனமும் அனைவரையும் கவர்ந்தது.கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டி ஓவியப்போட்டி கையெழுத்துப் போட்டி வாசித்தல் போட்டி கதை சொல்லுதல் போட்டி கவிதைப் போட்டி பாடல் பாடுதல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,சமூக சேவகர் பிரகாஷ் பரிசுகளை வழங்கினார்.மேலும் அவர் உரையாற்றுகையில் மாணவர்கள் வருங்காலத்தில் சிறப்பு பெற்ற வெற்றிகள் பல பெற்றிட வழி முறைகளையும் எடுத்துக் கூறினார். ஆசிரிய ஆசிரியைகள் பலரும் விழா நடத்திட மிகவும் ஒத்துழைப்பு தந்தனர்.விழா நிகழ்ச்சிகளை ஆசிரியை மணியம்மை தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad