தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் முன்னதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்று, அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்திவிடுவதாக மிரட்டி பணம் ரூபாய் 5,000/- கொண்டு வர சொல்லி சிறுமியின் காதலனை அனுப்பி விட்டு தனிமையில் இருந்த அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி காவலர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும்
விசாரணையில் மேற்படி காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து போக்சோ வழக்கின் கீழ் காவலர் சசிகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment