சாயர்புரத்தில் நான்காவது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 20 July 2022

சாயர்புரத்தில் நான்காவது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி.

தூத்துக்குடி ஸ்பாட்டன்ஸ் ஸ்போட்ஸ் அகடமி சார்பில் நடத்திய நான்காவது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி சாயர்புரத்தில் உள்ள போப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இதில் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கராத்தே போட்டியில் தேவா நர்சரி பிரைமரி ஸ்கூல் முதலிடத்தையும் சான்ஸ்போர்ட் அகடமி இரண்டாமிடத்தையும்,ஆலன் திலக் மூன்றாம் இடத்தையுமாக மொத்த வெற்றியாளராக மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
 சிலம்பப் போட்டியில்  பாரதி சிலம்பு கூடம் முதலிடத்தையும்,சான்ஸ் ஸ்போட்ஸ் அகடமி இரண்டாமிடத்தையும்,முத்து சிலம்ப கூடம் மூன்றாம் இடத்தையுமாக
ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.வெற்றி பெற்ற அணியினர் அனைவருக்கும் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 .நிகழ்ச்சியில் ஸ்ரீவை தி. மு. க மத்திய ஒன்றிய கழக செயலாளர் பி. ஜி. ரவி, தலைமை தாங்கினார்.மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் ராஜேஷ் ரவிச்சந்திரன், ஸ்ரீ வை. மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கொம்பையா, சாயர்புரம் பேரூர் கழக செயலாளர் கண்ணன், ஸ்ரீவை. பேரூர் கழக செயலாளர் கே.சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி கலந்து கொண்டார். மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி அச்சீவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சுரேஷ்குமார் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் சாகச நிகழ்து கலைகள் அனைவரையும் கவர்ந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad