பிளாஸ்டிக் விழிப்புணர்வு தன்னார்வலர்களுக்கு மாவட்ட எஸ். பி பாராட்டு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 July 2022

பிளாஸ்டிக் விழிப்புணர்வு தன்னார்வலர்களுக்கு மாவட்ட எஸ். பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் பிளாஸ்டிக்கை தடை செய்ய வலியுறுத்தி ஏரல் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் வீரவிளையாட்டுக்கலைக்குழு மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் சுருள் வாள்  விளையாட்டுகள் விளையாடியும்,  பாதகைகள் ஏந்தியும்
விழிப்புணர்வு ஊர்வலமாக 
ஏரலில் உள்ள முக்கிய வீதிகளிலுள்ள கடை களிலும், பேருந்து நிறுத்தங்களிலும்  சென்று மஞ்சள் பை கொடுத்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கான துண்டு பிரசுரம் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்
காணிப்பாளர் முனைவர். எஸ். பாலாஜி சரவணனை எஸ். பி. அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது அவர் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைவரையும் பாராட்டி சேவைகள் தொடர வாழ்த்துக்கள் கூறியதுடன் சான்றிதழ்களும் வழங்கினார். இதில் உதவும்கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் எம். அருணாச்சலம், டி. கணேசன், ஜி. கண்ணன், சிலம்பம் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன், பயிற்சியாளர்கள்  சண்முக நாராயணன், அஜித்குமார்,சிவா, சுப்புலட்சுமி, முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad