தூத்துக்குடி மாவட்டம் ஒட்டாப்பிடாரம் தாலுகா புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டமானது தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) . ஐ. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் அலுவலக பிரதிநிதி எம்.பிரகாஷ் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் 2012, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் (POCSO Act 2012) குழந்தைத் திருமணங்கள் மற்றும் சிறார்கள் கடத்தல் குறித்தும், ஏழை குழந்தைகள் நிதி உதவி பெறுவது குறித்தும்,குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஊராட்சி பகுதிகளில் உள்ள மன்ற தலைவர்கள் கொண்டு கண்காணித்திட வேண்டும் எனவும் அரசு மானியம் பெறும் விடுதிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் வாழ்க்கை முறையினை கண்காணித்து அவர்களை வழிநடத்தவும் எடுத்துரை தார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் என்.செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் தேவி ,ஜெயபாலன், துரைராஜ், தேவஆசீர், மருத்துவ அலுவலர் A.செல்வரத்தினம், குழந்தை பராமரிப்பு நிறுவன பிரதிநிதி இராஜதுரை, சைல்டு லைன் பிரதிநிதி V.உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை BLCPC மற்றும் VLCPC தூத்துக்குடி வட்டத்தில் கால முறையின்படி நடத்த தீர்மானங்கள் கூட்டத்தில் ஏற்றப்பட்டன.
Post Top Ad
Monday, 25 July 2022
வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
Tags
# ஒட்டப்பிடாரம்
About Tamilagakural Thoothukudi
ஒட்டப்பிடாரம்
Tags
ஒட்டப்பிடாரம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment