ஏசியன் கராத்தே பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 27 July 2022

ஏசியன் கராத்தே பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவி

 திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்து வரும் நிவேதா கடந்த வாரம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஏசியன் கராத்தே போட்டியில் 36 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்துள்ளார். இதற்காக அவரது பள்ளி தலைமை ஆசிரியர்,பள்ளி நிர்வாகம்,பெற்றோர், பயிற்றுனர் என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்தியா,ஆஸ்திரேலியா,இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் சண்டை பிரிவில் முதலிடத்தையும் கட்டா பிரிவில் முதல் இடத்தையும் பெற்ற நிவேதா இரண்டு பிரிவுகளுக்கும் தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார்.
அவரது வெற்றிக்கு  தந்தை விஜி, தாயார் கவிதா,பயிற்றுனர் வி. செந்தில் ஆனந்த் மற்றும் தலைமையாசிரியர் என அனைவரும் பாராட்டுகளையும்  வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஏற்கனவே நடைபெற்ற 12-வது தமிழ்நாடு பள்ளி விளையாட்டுப் போட்டியில் செப்பு பதக்கத்தையும் தேசிய அளவிலான முதலாவது போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று வெற்றியாளர் நிவேதா என்பது குறிப்பிடத்தக்கது.நடைபெற்று முடிந்த ஏசியன் கராத்தே போட்டியில் தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கு பெறுகிறார் நிவேதா அவரது வெற்றி தொடர தமிழக குரல் ஊடகமும் வாழ்த்து தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad