தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்களிலிருந்து பொதுமக்களை குறிப்பாக குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்கும் விதமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூபாய் 12.00 கோடி மதிப்பீட்டில் சங்கர பேரி முதல் எட்டயபுரம் சாலை புதூர் பாண்டியாபுரம் அருகாமையில் உள்ள பெரிய பள்ளம் ஓடை வரை மழைநீர் வடிகால் அமைக்கப்படவு ள்ளது. மேற்படி மழை நீர் வடிகால் அமைவிடங்களை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர். இ .ஆ.ப ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூபாய் 83.00 கோடி மதிப்பீட்டில் ஒரு பகுதி பணிகளான ரஹ்மத் நகர்,மச்சாது நகர், முத்தம்மாள் காலனி , ஐயாசாமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 19 . 50 கோடி மதிப்பீட்டில் பிரயண்ட் நகர் பகுதியில் அமைய உள்ள மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினையும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்படி ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ இ. ஆ. ப,மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கண்ணபிரான் , வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி செயற்பொறியாளர் (பணிகள்) ,உதவி செயற்பொறியாளர் (பணிகள்), வட்டாட்சியர் ,உதவி பொறியாளர் (திட்டம்), இளநிலை பொறியாளர் (பணிகள்) மற்றும் பொறியியல் பிரிவு சார்ந்த களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
Post Top Ad
Wednesday, 27 July 2022
மழைநீர் வடிகால் பகுதிகளில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment