" எனது குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பரிசுகளை வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 July 2022

" எனது குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பரிசுகளை வழங்கினார்.

 தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் சுத்தம் மற்றும் குப்பை கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடியில் உள்ள சிவந்தாகுளம் சாலையில் அமைந்திருக்கும் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவியருக்கு "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் சுத்தம் சுகாதாரம் தூய்மை இவற்றை மாணவப் பருவத்தில் இருந்து நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.மேலும் நமது வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதனால் அனைவருக்கும் பயன் தரும் என்றும்,வீடு தேடி வருகின்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு நாம் உதவும் வகையில் மாணவர்களும் பெற்றோர்களும் செயல்படும் பொழுது தூய்மையான தூத்துக்குடியை பெறலாம் என்றும் கூறினார்.இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா,37 வது வார்டு கவுன்சிலர் பாப்பாத்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை வரவேற்றுப் பேசினார்.நிறைவாக மாணவ மாணவியர் அனைவருக்கும் வண்ண கிரையன்ஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் வரைந்திருந்த ஓவியங்கள் அனைவரையும்  கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad