நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பேச்சியம்மாள் புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய பாத்திமா ராணி காமராஜரின் நலத் தொண்டு பற்றியும் கல்விக்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பற்றியும் அவரது வாழ்வியல் நெறி பற்றியும் மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் விழாவில் பங்கு கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் வர்த்தக ரெட்டி பட்டியிலுள்ள சோமசுந்தர நடுநிலைப்பள்ளியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக நடைபெற்றது. கல்வி வளர்ச்சி நாள் விழாவில் வர்த்தக ரெட்டி பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய பாத்திமா ராணி,ஊர் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா, காவல்துறையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கோபால், ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தட்டி அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பள்ளியின் மாணவ மாணவியர் நடனம் ஆடியும் பாடல் பாடியும் காமராஜரின் பெருமைகளை எடுத்துக் கூறியும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
No comments:
Post a Comment