நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் வர்த்தகரெட்டிபட்டியில் காசநோய் கண்டறியும் முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 July 2022

நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் வர்த்தகரெட்டிபட்டியில் காசநோய் கண்டறியும் முகாம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஓட்டப்பிடாரம் தாலுகா புதுக்கோட்டை காசநோய் அலகு சார்பாக வர்த்தகரெட்டிபட்டியில் காசநோய் கண்டறியும் முகாம் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் மாவட்ட துணை இயக்குநர் மருத்துவர் சுந்தரலிங்கம்(காசம் பிரிவு )  அறிவுறுத்தலின்படி  நடைபெற்றது. இம்முகாமில் காசநோய் மேற்பார்வையாளர்கள் கண்ணன்,மகாராஜன்,மலை விக்னேஷ்,முத்துலெட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர்  வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தினர் இதில் 1343  நபர்களில் 20 நபர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட காசநோய் மையம் சார்பாக தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி,சந்தன சங்கர்வேல்,பலவேசம்,செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர் 
         இம்முகாமினை காசநோய் மேற்பார்வையாளர் செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad