முள்ளக்காடு பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மகேஸ்வரி என்பவரின் மகள் தீபிகா அருகில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தாயார் கணவரை இழந்த சூழலில் தன்னுடைய மகளை வறுமையின் அடிப்படையில் கூட நன்கு படிக்க வைத்து வருகிறார். இந்தச் சூழலில் தற்போது தீபிகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் கல்வியின் தொடர்பாக தேவைப்படும் புத்தகங்கள்,நோட்டுகளை ஏரலில் இருக்கும் உதவும் கரங்கள் அமைப்பிடம் கேட்டதன் பேரில் ரூபாய் 2000 மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை எழுது பொருட்களையும் தீபிகாவிடம் கொடுத்தனர்.அதனை வாங்கிக்கொண்ட தீபிகா நன்றி தெரிவித்தார் .வருங்காலத்தில் தான் ஒரு நல்ல வழக்கறிஞர் ஆக வந்து சமூகத்தில் ஒரு மிகச் சிறந்த வழக்கறிஞராக பணிபுரிவேன் என்று பெருமிதத்துடன் கூறினார். புத்தகங்களை வழங்கிய உதவும் கரங்கள் நிறுவனர் அருணாச்சலம் மற்றும் கணேசன் ஆகிய இருவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.புத்தகங்களை வழங்கிய அருணாச்சலம் மற்றும் கணேசன் ஆகியோர் பேசும்போது இதுபோல பல தொடர்ந்து உதவிகளை உதவும் கரங்கள் செய்து வருவதாகவும் இன்னும் யாரேனும் உதவிகள் தேவைப்பட்டால் தங்களை அணுகலாம் என்றும் நிச்சயமாக அவர்களுக்கு உதவிகள் தரப்படும் என்றும் கூறினர்.
Post Top Ad
Sunday, 10 July 2022
ஏரல் உதவும் கரங்கள் சார்பில் ஏழை மாணவிக்கு பள்ளி புத்தகங்கள் நன்கொடை தரப்பட்டது
Tags
# தூத்துக்குடி
About Tamilagakural Thoothukudi
தூத்துக்குடி
Tags
தூத்துக்குடி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment