டெல்டா சாகுபடிக்கான உர கொள்முதலுக்கு ஸ்பிக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 3 July 2022

டெல்டா சாகுபடிக்கான உர கொள்முதலுக்கு ஸ்பிக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தமிழகத்திலுள்ள டெல்டா பகுதிகளான தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் பருவமழை பெய்து வரும் சூழ்நிலையில் குறுவை சாகுபடிக்கான உரம் மற்றும் டிஏபி தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில்  தூத்துக்குடி ஸ்பிக் உரத்தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் பேசும்போது குறுவை சாகுபடிக்கு தேவையான 36000-38000மெட்ரிக் டன் உரத்தையும்,5000 மெட்ரிக் டன் டி ஏ பியையும் ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு வாங்குவதனடிப்படையில் உர உற்பத்தியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பான ஆய்வு இன்று மேற்கொள்ளப்படுகிறது மேலும் இந்த உரமானது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளதால் தர நிர்ணயம் மதிப்பு இவைகளை தெரிந்து கொள்ளும்  விதமாகவும் ஆய்வு  நடத்தப்பட்டது என்று கூறினார்.இந்த ஆய்வில் அரசு வேளாண்மை உயர் அலுவலர்கள்,ஸ்பிக் நிறுவனத்தின் உர தயாரிப்பு வினியோகத் துறை உயரதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad